ஞானியிடம் சென்ற ஒருவர் ஐயா, உங்கள் சீடனைப் பற்றிய முக்கியமான செய்தி ஒன்றைச் சொல்வதற்காக வந்திருக்கிறேன் என்றார்.
ஞானி அவரிடம் முதலில் எனது மூன்று கேள்விகளுக்குப் பதில் சொல் என்று விட்டு ” நீ சொல்லப்போகும் விஷயம் உன் முன் நடந்ததா? எனக் கேட்டார். வந்தவர் ‘இல்லை’ என்றார்.
அடுத்து ‘நீங்கள் சொல்லப்போவது கெட்ட விஷயமா? நல்ல விஷயமா?’ எனக் கேட்டார்.
கெட்ட விஷயம் வந்தவர் சொன்னார்.
இதைக்கேட்டால் எனக்கு ஏதாவது லாபம் நஷ்டம் உண்டா?
அப்படி எதுவும் இல்லை.
உமக்கே உண்மையா பொய்யா எனத் தெரியாது. கேட்காவிட்டால் எந்த நஷ்டமும் இல்லை. அதுவோ கெட்ட விஷயம். நல்லதும் உண்மையும் அல்லாத அதை ஏன் நான் கேட்க வேண்டும்? எனக் கேட்ட ஞானி, வந்தவரைத் திருப்பியனுப்பினார்.
kural
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment